பிரதாப் போத்தன் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவர் பிரதாப் நடிப்பை முதன்முதலில் உற்று கவனித்த படம் அனேகமாக வறுமை நிறம் சிவப்பு ஆக இருக்கலாம் வழக்கத்தில் இருந்து விலகி தெரியும் முகம் அவருக்கு கூடுதல் அனுகூலத்தை தந்தது அதிகப்படியான வேட மௌனத்தை எப்போதும் பிரதிபலிக்கும் அந்த முகம் பிரதாப்புக்கு பல படங்களில் உதவி இருக்கிறது கோபம் சாந்தம் குரூரம் என ஊசி நுனியின் துல்லியத்துடன் பிரதிபலிப்பது அவரது பலம் மூடுபனி தமிழ் திரை உலகில் அதுவரை இருந்த மனப்பிறழ்வு கதாபாத்திரங்கள் மீதான அத்தனை அபிப்பிராயங்களையும் மாற்றி அமைத்த படம்.
இயலாமையுடன் கூடிய பரிவை, கைவிடுதலை பார்வையாளர்கள் அந்த படத்தின் சந்துரு கதாபாத்திரத்தில் மீது குவிப்பதற்கு அவரது கச்சிதமான வேட வழங்கல் உதவி செய்தது. மத்திய வர்க்கத்து பொறாமை இயலாமை ஏக்கம் பரிதவிப்பு நிராசை கோபம் போன்றவற்றை பல வேடங்களில் அசாத்தியமாக வழங்கினார் பிரதாப் . அவர் இயக்கி நடித்த மீண்டும் ஒரு காதல் கதை இன்னொரு திரை வைரம் . அதிகாலை நேரமே பாடல் மறக்கவே முடியாத ஆனந்த ஊற்று. பிரதாப் நாயகனாக நடித்த படங்களில் நன்றி மீண்டும் வருக மற்றும் வா இந்த பக்கம் இரண்டும் எனக்குபிடித்த படங்கள்.
பிரதாப் போத்தன் மீண்டும் ஒரு காதல் கதை படத்துக்குப் பின்னால் இயக்குனராகவும் மின்ன தொடங்கினார்.அவருடைய இயக்கத்தில் வெளிவந்த வெற்றி விழாமை டியர் மார்த்தாண்டன் சீவலப்பேரி பாண்டி போன்ற பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இளையராஜா இசையில் பிரதாப் இயக்கிய ஆத்மா வித்தியாசமாக கையாளப்பட்ட கதைக்களனைக் கொண்டிருந்தது.சிவாஜி கணேசனும் மோகன்லாலும் இணைந்து நடித்த ஒரு யாத்ரா மொழி அவர் இயக்கத்தில் உருவானதே. நாயக வேடங்களை தாண்டி பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஒரு நடிகராகவும் பிரதாப் போத்தன் விளங்கினார்.தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் அவருடைய அப்பாவாக தூள் கிளப்பினார் பிரதாப் தேடினேன் வந்தது படத்தில் அவர் ஒரு வித்தியாச கோமாளியாக வலம் வந்திருப்பார் அமரன் படத்திலும் பிரதாப் சிறப்பான வேடத்தில் நடித்தார்.
இன்று பிரதாப் போத்தனின் எழுபதாவது பிறந்தநாள்.
தமிழில் மாத்திரமல்ல தென் மொழிகளில் தோன்றிய முக்கியமான திரைக்கலைஞர்கள் வரிசையில் பிரதாப்பின் இடம் மறுக்க முடியாது
அவருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்
வாழ்தல் இனிது