இன்றைய கவிதை
இரண்டு கவிதைகளை இன்றைக்கு பகிரலாம் என நினைக்கிறேன்
“சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்” என்ற தலைப்பில்
பூமா ஈஸ்வரமூர்த்தியின் சமீபத்திய கவிதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது 104 பக்கங்கள் கொண்ட இதன் விலை 100 ரூபாய். பூமா ஈஸ்வரமூர்த்தியின் எட்டாவது நூல் இது.
கவிதை ஒரு அனுபவமாக மறைபொருளைக் காணத் தருகிற காட்சி ரூபமாக வாசகனுக்கு கிடைப்பது ஒரு விதம். இன்னொரு விதம், மூடிய கண்களைத் திறவாமல் சலூன் நாற்காலியில் சவரத்துக்குத் தன் முகத்தை ஒப்புக்கொடுத்திருப்பவன் காதருகே சன்னமான குரலில் ரகசியத்தை அறிய தருவது. பூமாவின் கவிதைகள் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவை. என்னளவில் நவீன கவிதைகளுள் காதலை, அதன் நேரடித் தாக்கத்தைக் கவிப் பொருளாக்கி அதிகமும் கவிதைகளைப் புனைந்தவர் பூமா ஈஸ்வரமூர்த்தி எனச் சொல்ல விரும்புகிறேன். நுட்பமான அவதானம் ஒன்றை பழக்கப் படுத்திக் கொண்டே செல்லக்கூடிய அனுபவ விரிதல்கள் இக்கவிதைகள் எங்கும் காணக் கிடைக்கின்றன.
இரவை நெய்கிறது பார்
சிலசமயம் சிலந்தியும்
நெய்து தருகிறேன் என
வரிசையில் வந்து நிற்கும்
கூடுகட்டத் தெரிந்த பறவையின்
அலகால்
இரவு நெய்யப் பெறுகிறது
நிச்சயமாக சொல்ல இயலும்அய்ந்து நிலப் பூக்களால்
இரவு நெய்யப் பெறுகிறதுஎந்த நிலப் பூக்கள்
எந்த நாளில் அதிகம்
நாமறிந்த பூக்களின் அறியாத புத்தம் தன்மையை எத்தனை அழகாக வெளி சொல்ல முடிகிறது பாருங்கள்
இன்னொரு கவிதை இதே தொகுதியில்
இந்த பூவின் பெயரென்ன
அதுவல்ல கேள்வி இப்போதுஇது ஒரு பூ. அவ்வளவே
எப்போதும்
வாசிக்க வேண்டிய தொகுப்பு