இன்றைய கவிதை
எனக்குத் தெரியும்
பழங்கள் எப்போது அழுகத் தொடங்குமென்று
அன்பு எப்போது மூச்சுமுட்டுமென்று
உண்மை
எந்த இறகால் கனக்குமென்று
ஷங்கர்ராமசுப்ரமணியன்
கல் முதலை ஆமைகள்
க்ரியா வெளியீடு
விலை ரூ 180
ஷங்கர் ராமசுப்ரமணியனின் மேற்காணும் கவிதை ஓங்கிப் பிளக்கிறது. முதலிரண்டு வாக்கியங்களில் உருண்டு புரண்டு எங்ஙனமாவது தப்பிவிடலாம் என்று முனையும் அதே மனத்தைக் கவிதையின் கடைசிக் கதுப்பில் சுக்கு நூறாக உடைத்தெறிந்து விடுகிறார். எஞ்சுவதற்கேதுமின்றிக் காணாமலடிப்பது கவிதையின் வீர்யங்களில் ஒன்று. அது இறகாய் வருடினால் இமை நுனி கொண்டு காற்றை அளக்கவும் செய்யும். அடித்தெறிவதானால் இப்படித் துகள்களாக்கித் தூர எறியும். ஒன்றிலிருந்து மற்றொன்று என நேரடியாய் பெயர்த்து வைக்கிற அனுபவங்களை மட்டுமல்லாது சலனத்தை நிகழ்கண மாற்றங்களை இடம்பெயர்தலின் சகல துணுக்குகளையும் காணத் தந்தபடி கவிதையைப் புனைவது பேராற்றல். அத்தகைய எழுத்துவன்மை ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிமுறையின் ஒரு பகுதி
வாசிக்க வேண்டிய நூல்