இன்றைய கவிதை
சுகுமாரன் சமீபத்திய கவிதைத் தொகுப்பு
“இன்னொரு முறை சந்திக்க வரும்போது”
காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது
இதன் விலை ரூ 90
சுகுமாரன் தனக்கென்று பிரத்தியேக மொழிப் பரவல் கொண்டவர் ஒரு எளிய தன் புலம்பலை அளவில் மிகப்பெரிய ஸ்திரமாக சித்திரமாக மாற்றி விடும் வல்லமை கொண்டவர் காலம் அவர் கவிதைகளில் இடையே மெல்லிய கிரணம் போல் ஒழுகுவது அதன் சிறப்பு எப்படி சொல்வது என்பதில் தேர்ந்த சுகுமாரன் அது கவிதைகள் எப்போதும் என் விருப்பத்துக்குரிய வை இந்த தொகையில் ஒரு கவிதை
அணியில் திகழ்வது
வெட்சிப் பத்தின் தனிமலர் மீது
கால்பாவாமல் அந்தர மிதப்பாகப்
பட்டுப்பூச்சி தேனுண்ணும் காட்சி
எதற்கு உவமையாகும்?முன்விளையாட்டில்
இணையின் இதழ்ச் சுரப்பை
ஒற்றி உறிஞ்சும் மென்மைக்குஅல்லது
அபூர்வ கூடலின் அற்புத வேளைக்கும்