அன்பை அளவிடுதல்
என்னிடமிருப்பது
தாங்க
முடியாத
பேரன்பு.
எப்படியானதென்றால்
“விற்கப் பண்டங்களைச்
சுமந்துகொண்டு
வீதிவழியே வருபவள்
வெயில் பொழிவின் நடுவே
கிடைக்கும் சின்னஞ்சிறு
நிழலடியில்
தலைச்சுமையை
இறக்கித் தரையில்
கிடத்தி விட்டுச்
சற்றே
கண்ணயர முனைகிறாள்.
நொடிப்பொழுதில்
அரிதினும் அரியவொன்றைக்
களவுகொடுக்கிறாற் போல்
வந்துபோகிற கனவுதாளாது
திடுக்கிட்டுக் கலைந்தெழுவாள்.
திசை மீள்கையில்
முன் போலல்லாது
சற்றே இலகுவாய்த்
தோன்றுகிற
சுமைப்பொருள்”
போல அது
சாலச்சுகம்.