Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

தானாய்ச்சுழலும் இசைத் தட்டு                    2 புனிதமலர் “சங்கீத கலா ப்ரபூர்ணா” ஜாலீ ஆப்ரஹாம் கேரளத்தைச் சேர்ந்தவர்.பி.எஸ்.சி தாவரவியல் பட்டதாரியான ஜாலீ பாடற்பதிவுப் பொறியாளராகவும் செயல்பட்டவர். பாடகர். எம்.எஸ்.விஸ்வநாதன் எழுபதுகளில்… Read More »2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

கதைகளின் கதை 1 

யாருக்குத் தான் கதை பிடிக்காது? நம் பால்ய காலம் கதைகளால் துவங்கியது.கதை என்பது நெடுங்கால வழக்கத்தின் தொடர்துளி.குழந்தைகள் சொல்லத் தெரியாமல் சொல்லிப் பார்க்கும் பொய்களும் கதைகள் தாம்.நேராய்ப் பார்க்கக் கிடைக்கும் காட்சியை அடுத்தவரிடம் விவரிக்க ஆரம்பிப்பவரின் குரலின் தொனி அந்தச் சம்பவத்தை… Read More »கதைகளின் கதை 1 

மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம்

“உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம் எது? ஏன் என்பதைப் பற்றி அதிகபட்சம் 100 சொற்களுக்குள் கீழே கமெண்ட்டில் பதிவிடுங்கள். சிறப்பான 25 பதிவுகளுக்கு என்னுடைய புத்தகம் ஒன்றை பரிசாக அளிக்கிறேன்” என்று எனது முகப்புத்தகப் பக்கத்தில் 22 ஜனவரி காலை… Read More »மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம்

திருவுளம்

திருவுளம் குறுங்கதை நீலகண்டனின் வீட்டின் முன் பரந்து விரிந்திருந்த தோட்டத்தில் வாகை மரத்தடியில் தான் அவருடைய யதாஸ்தானம். அவர் அமர்ந்து கொள்ள வாகாக கூடைச்சேர். பக்கத்திலேயே பிரம்பு மேசை வட்டமாக அதில் அவருக்குத் தேவையானவை அனைத்தும் இருத்தப்பெறும். தினத்தந்தி பேப்பர் மேல்… Read More »திருவுளம்

உய்யவும், ஓங்கவும்!

 மானுடம்  உய்யவும், ஓங்கவும்! மனக்குகைச் சித்திரங்கள் ஞாபக நதி ஆத்மார்த்தி எழுத்து பதிப்பகம் ஆத்மார்த்தி-க்கு புதிதாக அறிமுகம் ஏதும் தேவையில்லை. தமிழ் பேசும் நல்லுலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரல்லவா….! இந்த நூலில் இடம் பெற்றுள்ள இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் ‘புதிய தலைமுறை’-யி்ல்… Read More »உய்யவும், ஓங்கவும்!

            காபி சகாதேவனுக்கு குண விலாஸ் காபி என்றால் உயிர். அந்த ஊரின் 70 வருட சரித்திரத்தில் என்னென்னவோ மாறிக்கொண்டே வருகிறது. மாறாத சிலவற்றுள் ஒரு மச்சத்தைப் போல் குண விலாஸ் காபி ஒளி… Read More »

கவிதையின் முகங்கள் 10

கவிதையின் முகங்கள் 10 கேள்விகளாக எஞ்சுதல் வொர்ட்ஸ்வர்த்துக்கு வசந்தகாலத்தில் மலரும் நெடிய பொன்நிற  டஃபோடில் மலர்கள் எப்படியோ அப்படித் தான் எனக்குப் போதாமையும் -பிலிப் லார்க்கின் கவிதை என்பது சந்தோஷமான மற்றும் சிறந்த மனங்களின் சிறந்த மற்றும் சந்தோஷமான தருணங்களைப் பதிவு… Read More »கவிதையின் முகங்கள் 10

சாலச்சுகம் 20

சாலச்சுகம் 20 காணாமச்சம் திடீரென்று ஒரு மச்சத்தைக் காணவில்லை. நேற்று இரவு உறங்கும் போதும் அந்த மச்சம் என்னோடு தான் இருந்திருக்கிறது என்று நம்ப விரும்புகிறேன். உண்மையில் எப்போது அதனைக் கடைசியாக கவனித்தேன் என்று தெரியவில்லை.. இந்த தொலைதல் மிகவும் அந்தரங்கமாகத்… Read More »சாலச்சுகம் 20

திரை

குணச்சித்திரத் துளிகள் திரை தமிழ்மகன் இரண்டாம் பதிப்பு- 2021-144 பக்கங்கள்-140 ரூ- திரைக்கட்டுரைகள்-writertamilmagan@gmail.com இதழியல் துறையில் நீண்டதொரு அனுபவம் கொண்டவர் தமிழ்மகன். பா.வெங்கடேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964 ஆமாண்டு பிறந்தவர்.தொடர்ச்சியாக எழுத்துத் துறையில் கவனத்திற்குரிய படைப்புக்களின் மூலம் இயங்கி… Read More »திரை