Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

பொய்யறுதல்

சமீபத்து ப்ரியக்காரி   3 பொய்யறுதல் சாந்தமொன்றை எண்ணுக யேங்கியேங்கித் திருக்கலைக காத்துக் கடும்பொழுது கோலம் தீர்க அதற்குமொரு பெரும்போழ்து அப்பால் வந்து தலைகோதிக் கன்னம் பற்றிக் காதல் சொரியும் பூநிகர்ப் பொய்வேலை புறந்தள்ளுக பேரென்பென்று ஏதுமில்லை காண் சட்டென்று கண்ணுற்ற… Read More »பொய்யறுதல்

ரெண்டாவது ரோஜா

ரெண்டாவது ரோஜா குறுங்கதை அவனும் அவளும் நண்பர்கள். அவனுக்கு ராஜ் என்று பேர். அவளுக்கு கீதா. கல்லூரியில் நுழைந்த சில நாட்களிலேயே கீதாவுக்கு ராஜ் மீது ஒரு வாஞ்சை பிறந்து விட்டது. சாதுவான அன்பான தோற்றம். குணாம்சங்களும் அப்படித் தான். அவளுக்கும்… Read More »ரெண்டாவது ரோஜா

க்ளிஷே

சமீபத்துப்ரியக்காரி 2 க்ளிஷே மச்சமென்பது சிறுகச்சிறுகக் கொன்றொழிக்கும் தவணைமுறை யுத்தம் என்றெழுதிக் காட்டினேன். இதோ பார் இது க்ளிஷே. இதை எழுதுவதற்கு யாரோ போதுமே ஏன் நீ? இதில் எழுதப்படவும் நானெதற்கு? மேலாய் இப்படி எழுதுவதற்கா என்னிந்த மச்சம் என்றபடியே சற்றே… Read More »க்ளிஷே

கிறக்கங்களின் பேரேடு

  சமீபத்துப் ப்ரியக்காரி 1. கிறக்கங்களின் பேரேடு அன்பே எப்போது உன் கண்கள் இரண்டையும் மூடிக் கிறங்குவாய் என்பது எனக்குத் தெரியும். எனக்குத் தான் தெரியும். எப்போதெல்லாம் அப்படிக் கிறங்கினாய் என்பதைக் குறித்து வைக்கிறதற்கென்று சின்னஞ்சிறிய கிறக்கங்களின் பேரேடு ஒன்றை எனக்குள்… Read More »கிறக்கங்களின் பேரேடு

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்    குறுங்கதை “அவனுக்கென்ன தெரியும் சின்னக்குழந்தை” என்றாள் ராணி அத்தை. ரொம்ப நல்லவள்.எனக்குப் பிடித்தமான சாக்லேட்டுக்களை எப்போதும் வாங்கிக்கொண்டு வருவாள். “அப்டியெல்லாம் விட்டுறக் கூடாது. இது..இது ஒருவகையிலான அடமண்ட் நேச்சருக்குக் கொண்டு போய் விட்டுறும்.டைல்யூஷன்,அப்செஷன்…அப்டி இப்டின்னு… குழந்தைகளை நாம… Read More »ஸ்பைடர் மேன்

புதிய மொழி

புதிய மொழி  குறுங்கதை அவனுடைய வாத்தியார் அவனைப் பார்த்ததும் அப்படிச் சொல்வார் என்று கூடப் படிக்கும் யாருமே எண்ணிப் பார்க்கவே இல்லை. முகத்தில் பேப்பரை வீசி அடித்து விட்டுக் கத்தினார். “நீ தயவு செய்து இந்த மொழியை அவமானப் படுத்தாதே. உனக்கு… Read More »புதிய மொழி

பழுப்பு டைரி

பழுப்பு டைரி இதை விட்டால் இன்னோர் சமயம் வாய்க்காது. வேணு பரபரத்தான். அவன்வீட்டில் எல்லோரும் சொந்தக்காரர் திருமணம் என்று பழயனூர் சென்றிருந்தார்கள். அவனுக்கு ஆபீசில் முக்கியமானதொரு மீட்டிங்க் இருந்தபடியால் செல்ல முடியவில்லை. அது முற்றிலும் உண்மை அல்ல. அவன் நினைத்திருந்தால் சற்றுத்… Read More »பழுப்பு டைரி

மிட்டாய் பசி நாவலை வாங்க:-

மிட்டாய் பசி நாவலை வாங்குவதற்கு எளிய வழி இந்த மாதம் முழுவதும் மிட்டாய் பசி நாவலை அதன் விலையான ரூ 180 க்கு பதிலாக தபால் செலவு உட்பட ரூ150 மட்டும் செலுத்திப் பெறலாம்.இச்சலுகை தமிழகத்திற்கு மட்டும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு… Read More »மிட்டாய் பசி நாவலை வாங்க:-

எனக்குள் எண்ணங்கள் 1

எனக்குள் எண்ணங்கள்         1 பதவிக்காக நெடு நாட்கள் தேடிக் காத்திருந்து கைவரப் பெற்ற புத்தகம் எதாவது உண்டா..? எனக்கு அப்படியான புத்தகம் சுஜாதாவின் பதவிக்காக. அதைப் பற்றி நண்பர் ஷேகர் பெரிதாகச் சொல்லி பிரமிக்க வைத்தார்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 1

வெளியேற்றம்

வெளியேற்றம்   குறுங்கதை தான் தேர்ந்தெடுத்த காகம் தனியாகவே எப்போதும் இருப்பதே இல்லை என்பது தெரிந்ததும் நரி மனம் நொந்து விட்டது. என்னடா இது நாய்படாத பாடு என்று சொல்வது நரிகளுக்கும் சேர்த்துத் தானா என விம்மிற்று. இன்றைக்கெல்லாம் எதையும் தின்றதில்லை… Read More »வெளியேற்றம்