Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

சாலச்சுகம் 15

முத்தத்தின் மீனினங்கள் அன்பே பேசியபடியே பிரிந்து செல்ல ஏதுவாய் ஒருதரம் சந்திக்கலாமென முடிவாயிற்று. முன்னம் ப்ரியங்களைக் கொட்டிய வழமையின் சந்திப்பிடங்களில் எதைத் தேர்வெடுப்பது என வெகுநேரம் குழம்பினோம். பிற்பாடு சன்னமான ஒளிச்சாரலுடனான தேநீர்த்தலத்தில் எங்கே நட்பன்பைக் காதலாக்கிக் கதைத்துக் கொண்டோமோ அங்கேயே சந்தித்துக் கொள்ளலாமென… Read More »சாலச்சுகம் 15

சாலச்சுகம் 14

நீ வந்துவிட்டாற் போலொரு பிரமை அதை நம்ப வேணுமாய் ஆவலாதி அது தான் நிஜம் என்றொரு ஆழ ஏக்கம் கூடுமட்டும் சமீபித்துவிடும் என்றொரு நம்பிக்கை எப்படியாவது நிகழ்ந்தால் போதுமானதென்பது பிரார்த்தனை தேவை பிரார்த்திக்கவொரு தெய்வம் சாலச்சுகம்

சாலச்சுகம் 13

லவலேசம் ம்யூசியத்தில் பார்க்கக் கிடைத்த எலும்புக் கூட்டின் பாலினம் தெரியாதது ஒரு வசதி. ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புழக்கத்தில் இருந்த நாணயம் எந்தக் கனவில் யாராகி வருமோ கனவென்பதன் வசதி புணரக் கிடைக்கையில் முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டியதில்லை மேலும் புணர்ந்தடங்கிய… Read More »சாலச்சுகம் 13

சாலச்சுகம் 12

  கனவுக்குத் தெரியாத முத்தம் வயலட் என்பது நிறமல்ல மழை என்பது நீர்மமல்ல கார் இருக்க ஸ்கூட்டி கவர்ந்து கிளம்புகையில் ஜில்ரேய்ய்ய்ய்ய்ய் என்று கூவுவதொன்றும் அர்த்தமற்ற சொல்லாடல் அல்லவே அல்ல இரவின் நடுவில் மழையின் பொழுதில் ஒற்றை ஐஸ்க்ரீமை அப்படியே மொத்தமாய்… Read More »சாலச்சுகம் 12

சாலச்சுகம் 11

அன்பே ஒரு போதும் உன்னால் என் நினைவுகளற்று இருக்க முடியாது ப்ரியம் முடிந்து போவதென்பது ஆர்பரிக்கும் கடல் நடுவே இரு தேசங்கள் தங்கள் எல்லைகளைப் பிரித்துக் கொள்வது போலத் தான் எனக்கும் திகைப்பாகத் தான் இருந்தது. எப்படியும் உனை மறந்தே தீர்வது… Read More »சாலச்சுகம் 11

சாலச்சுகம் 9

ஏன் இந்த மேஸ்திரிகள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த சமையல்காரர்கள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த நடிகர்கள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த அரசியல்வாதிகள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த நீதிபதிகள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த காவலர்கள் இப்படி இருக்கிறார்கள்… Read More »சாலச்சுகம் 9