அறிவிப்பு

குமுதம் சிறுகதை

குமுதம் சிறுகதை   இந்த வாரக் குமுதம் இதழில் எனது சிறுகதை “சபாட்டினி” வெளியாகி உள்ளது. இதற்கான ஓவியத்தை எழுதியிருப்பவர் ஓவியர் ஸ்யாம். குமுதம் இதழுக்கு நன்றி!!

புதிய தொடர்

புதிய தொடர் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் தினமலர் இதழோடு வெளியாகும் இணைப்பிதழான வாரமலர் இதழில் “சொல்லப்படாத கதைகள்” எனும் பெயரில் சென்ற நூற்றாண்டின் சினிமா குறித்த தொடரொன்றைத் தொடங்கி இருக்கிறேன். வாசித்து இன்புறுக என்று யாவரையும் அன்போடு வேண்டுகிறேன். வாழ்தல் இனிது… Read More »புதிய தொடர்

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா வருகிற 29 ஆம் தேதியன்று மதுரை- மேலூரில் பாபு சசிதரனின் புதிய கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்ற இருக்கிறேன். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் கலந்துகொள்ள வரவேற்கிறேன்.      

வைகை இலக்கியத் திருவிழா

தமிழக அரசு முன்னெடுக்கும் இலக்கிய விழாக்கள் மாவட்டந்தோறும் நடந்தேறி வருகின்றன. அந்த வரிசையில் நாளை 26-03-2023 மற்றும் திங்கட்கிழமை 27-03-2023 இரண்டு தினங்கள் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தினுள் வைகை இலக்கியத் திருவிழா நடக்கவிருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 முதல்… Read More »வைகை இலக்கியத் திருவிழா

2 IN 1 நிகழ்வு

2 IN 1 நிகழ்வு வருகிற சனிக்கிழமை DEC 24,2022  காலை சென்னை மைலாப்பூரில்  அமைந்திருக்கும் நிவேதனம் ஹாலில் எனது 3 புதிய நூல்கள் வெளியீட்டு விழாவும் இரண்டு நாவல்களின் விமர்சன அரங்கமும் ஒருங்கே நடைபெற உள்ளது. விழா காலை 10… Read More »2 IN 1 நிகழ்வு

புதிய புத்தகங்கள்

வருகிற சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி எனது மூன்று நூல்கள் பிரசுரம் காண்கின்றன. புலன்மயக்கம் நாலு பாகங்களும் பல்வேறு புகைப்படங்களுடன் செறிவூட்டப்பட்ட ஒரே நூலாக வெளியாக உள்ளது. விலை 690 ரூபாய்.இது ஒரு ஹார்ட் பவுண்ட் புத்தகம் வசியப்பறவை ஆத்மார்த்தியின் 30… Read More »புதிய புத்தகங்கள்

குமுதம் தீராநதி

குமுதம் தீராநதி இந்த {செப்டெம்பர் 2022} இதழில் கதை சொல்லும் கவுண்ட்டர்கள் என்ற தலைப்பில் சினிமா டிக்கட் கவுண்டர்களில் 80-90களில் காணக்கிடைத்த அனுபவச்சித்திரங்களை மையப்படுத்தி நான் எழுதிய கட்டுரை வெளியாகி உள்ளது.  

இசையின் முகங்கள்

ஷங்கர் மகாதேவன்   ஷங்கர் மகாதேவனின் குரல் மீது பெரிய மயக்கமெல்லாம் இருந்ததில்லை ஆனாலும் அனைத்துப் பாடல்களின் நிகழ்கணங்களிலும் வித்யாசமாகத் தன்னைத் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தவை அவரது பாடல்கள். பிசிறேதுமற்ற ஒழுங்கும் தீர்க்கமும் எப்போதும் ததும்புகிற உற்சாகமும் அவர் குரலின் நிரந்தரங்கள்.… Read More »இசையின் முகங்கள்

இசையோடு இயைந்த நதி 4

பேசும் புதிய சக்தி இதழில் நான் எழுதி வருகிற இசையோடு இயைந்த நதி பாடலாசிரியர்களைப் பற்றிய தொடரில் இந்த அத்தியாயம் எம்.ஜி.வல்லபன் குறித்த வல்லமைக் கவி வல்லபன் இடம்பெற்று உள்ளது. வாசித்து இன்புறுக

இசையோடு இயைந்த நதி 3

இந்த மாதம் பேசும் புதிய சக்தி இதழில் நான் எழுதிவருகிற இசையோடு இயைந்த நதி பாடலாசிரியர்களைப் பற்றிய தொகைத் தொடர்பத்தியில் செந்தூரக் கவி கங்கை அமரன் என்ற அத்தியாயம் வெளியாகி உள்ளது. வாசியுங்கள் அன்பர்களே