நாவல்

யாக்கை 7

7.காற்றின் ஆதுரம் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் முடிவடைந்து செய்திகள் தொடங்கின. சிந்தாமணிக்கு இந்தக் கரி அடுப்பை விட்டொழிப்பது என்றைக்கு வசப்படும் என்று ஆற்றாமையாக வந்தது. அவள் முன்பு வேலை பார்த்த இஞ்சினியர் பங்களாவில் இருக்கிறதும் தெரியாமல் எரிவதும் உறுத்தாமல் சமையல்… Read More »யாக்கை 7

யாக்கை 6

  6 மழை துணை பகை அது மழைக்காலத்தின் நடுப்பகுதி. சென்ற வருடம் பார்த்தது முன்னர் எப்போதும் பார்க்காத பெருமழை. ஊரே வெள்ளக் காடாகிக் கிட்டத் தட்ட இரண்டரை மாதங்களைத் துண்டாடிச் சென்ற மழை. பல தொழில்களும் அடிபட்டன. ஊருக்குள் நிறையப்… Read More »யாக்கை 6

யாக்கை 5

5 பொட்லம் யாரோ சைக்கிளில் பெடலடித்துக் கொண்டே சென்றார்கள். ” வீட்டை அடமானம் வெக்கணுமா? விக்கணுமா?” என்ற எழுமலையை ஒரு ஞானப் பார்வை பார்த்தான் சின்னு. “வீட்ட வித்துட்டு உன் சுமோ கார்ல படுத்துக்கச் சொல்றியா? ” சாந்தமான குரலில் தான்… Read More »யாக்கை 5

யாக்கை 4

4 காணா விலங்கு கிருஷ்ணாபுரத்தின் அடையாளமாகவே ஒரு காலத்தில் திகழ்ந்தது கோட்டை வீடு. எல்லாம் பழைய கதை. பராமரிப்பில்லாத அரண்மனை பட்டுப்போன மரமாய் வெளிறிப் போகும். காம்பவுண்டு சுவரில் ஆங்காங்கே கற்கள் உதிர்ந்திருந்தன. நுழையுமிடத்து விக்கெட் கதவு ஒன்றோடு மற்றது பொருந்தாமல்… Read More »யாக்கை 4

யாக்கை 3

பாம்பும் புலியும் இன்று மழை வருமா எனத் தெரியவில்லை. மழை வந்தாலென்ன வராவிட்டாலென்ன..? மாபெரும் கூரைக்குக் கீழே மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தபடி வழக்கு நடத்துவதில் மழைக்கு என்ன பங்கு இருக்கப் போகிறது..? மழை வெவ்வேறு வேடங்கள் தரிக்கக் கூடியது தான். சில… Read More »யாக்கை 3

யாக்கை 2

யாக்கை 2 செல்வச் சர்ப்பம் “யாராலயும் நடந்த கொலையை மாத்த முடியாதின்னாலும் இனி நடக்கப் போறதையாச்சும் நல்லதாக்க முடியும்லண்ணே..? நாஞ்சொல்றதைக் கேளு. கர்த்தர் இன்னமும் உனக்கான வெளிச்சத்தை விட்டு வச்சிருக்கார். நீ மட்டும் கொஞ்சம் ஒத்து வந்தைன்னா மத்ததெல்லாம் நல்லா நடந்துறும்ணே…இதுக்கு… Read More »யாக்கை 2

யாக்கை 1

யாக்கை 1 பைத்தியப் பொழுது தன் கையில் இருக்கும் பச்சை நிற ஃபைலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் எம்.எஸ். தகவல்களை ஒவ்வொன்றாகப் படித்தார். கொலையில் ஈடுபட்டது மொத்தம் ஐந்து பேர். 56 வயதுக்காரன் இருதயம் தான் தலைவன். இருப்பதில் இளையவன் பெயர்… Read More »யாக்கை 1

ஏந்திழை

ஏந்திழை -ஆத்மார்த்தி. ஏந்திழை என்பவள் தனியொருத்தியான அழகியல்ல. இந்த மொத்த பிரபஞ்சத்தின் ஒரு பங்கு மட்டுமே நிறைந்த அழகிகளில் அவர்களின் யவ்வனத்தில் இருந்து சொட்டு சொட்டாய் எடுத்து நிறைந்தவள். இது ஒரு நாவலுமல்ல.. இது ஒரு கவிதை. மொத்த நாவலும் ஒரு… Read More »ஏந்திழை

ஏந்திழை-1

ஏந்திழை 27 நாய்கள் குதிரைகள் பன்றிகள் ஷெனாயின் குதிரைக்கும் நாய்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவனுடைய நாயின் பெயர் Terror, அவனுடைய குதிரையின் பெயர் Agony இந்தியாவுக்குப் புறப்பட்டு வரும்போதே டெரரையும் அகனியையும் தன்னுடனே அழைத்து வரும் அளவுக்கு அவை இரண்டின்… Read More »ஏந்திழை-1