அறிவிப்பு

அந்திமழை-கட்டுரை

இம்மாத அந்திமழை இதழில் நான் எழுதியிருக்கும் கெட்ட பய ஸார் இந்தக் காதல் கட்டுரை நிழல் உலகின் காதலைப் பேசுகிறது. வாசியுங்கள் அன்பர்களே    

தமிழ் விக்கி

  தமிழ் விக்கி தமிழ் விக்கி இணையக் களஞ்சியத்தில் எனக்கென்று ஒரு பக்கம் உருவாகியிருக்கிறது. நேற்று இரவு என் பார்வைக்கு வந்ததிலிருந்து நாலைந்து முறை இதனுள் நுழைவதும் வெளிவருவதுமான செல்லப்ரிய ஆட்டமொன்றை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டே இருக்கிறது மனது. விஷயம் அது… Read More »தமிழ் விக்கி

புதிய தொடர்

  பேசும் புதிய சக்தி மாத இதழில் இந்த மாதம் May 2022 முதல் நான் எழுதுகிற புதிய தொடர்பத்தி “இசையோடு இணைந்த நதி” துவங்கி இருக்கிறது. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் குறித்த தொடர் இது. முதல் அத்தியாயத்தில் நா.காமராசன் பாடல்பயணம்… Read More »புதிய தொடர்

சங்கர் கணேஷ்

சங்கர் கணேஷ் தமிழினி இணைய இதழில் திரைஇசை குறித்து நான் எழுதுகிற இரண்டாவது தொடர்பத்தி இசையின் முகங்கள். கமல்ஹாசன்-வீ.குமார்-ஷ்யாம்-மலேசியா வாசுதேவன்-ஹரிஹரன்-பி.ஜெயச்சந்திரன்-ஹரீஷ் ராகவேந்திரா ஆகியோர் குறித்த அவதானங்களைத் தொடர்ந்து அதன் எட்டாவது அத்தியாயத்தில் திரையிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் குறித்த அலசலின் முதல் பகுதி… Read More »சங்கர் கணேஷ்

வருடம் இதழ்

வருடம் இதழ் இன்று உலக புத்தக தினம். இந்த அறிவிப்பு இன்று வெளியாவது தான் சாலப்பொருத்தம். தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலரும் இதில் எழுதி இருக்கின்றனர். வருடத்திற்கொரு முறை வெளிவரும் இலக்கியச் சிறப்பிதழ் இஃது. சாரு நிவேதிதா,தேவேந்திரபூபதி, பா.ராகவன்,மனுஷ்யபுத்திரன்,எஸ் செந்தில்குமார், வசுமித்ர,… Read More »வருடம் இதழ்

திரைக்கதைப் பயிற்சி

திரைக்கதைப் பயிற்சி நேரலை வகுப்பாகத் திரை க்கதைக் கலையைப் பயிலுவதற்கான வாய்ப்புகள் அரியவை. அன்புக்குரிய எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை குறித்த பயிற்சி வகுப்பை வருகிற (ஏப்ரல்) 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இணையவழியில் நிகர்நிஜ வகுப்புக்களாக எடுக்க இருக்கிறார்.… Read More »திரைக்கதைப் பயிற்சி

கவிஞர் முத்துலிங்கம்-80

கவிஞர் முத்துலிங்கம் அவர்களது 80 ஆம் அகவையை முன்னிட்டு வடசென்னை தமிழ்ச்சங்கம் சென்னை இலக்கிய சந்திப்பு ஒரு நிகர்-நிஜ இணைய வழிக் கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறது. வருகிற சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்வு ஜூம் இணையவழியில் நிகழவுள்ளது. இதில்… Read More »கவிஞர் முத்துலிங்கம்-80

நெல்லை புத்தகக் கண்காட்சியில்

நெல்லை புத்தகக் கண்காட்சியில் பாடல்கள் : வரிகளிலிருந்து வாழ்க்கைக்கு எனும் தலைப்பில் வருகிற ஞாயிறு 27.03.2022 மாலை உரையாற்றுகிறேன். நெல்லை வாழ் நண்பர்கள் அன்பர்கள் கலந்து கொள்ள வருமாறு இருகரம் கூப்பி வரவேற்கிறேன். வாழ்தல் இனிது  

இரா.முருகனின் சிறுகதைகள்

வருகிற 12 மார்ச் சனிக்கிழமை மாலை நேரலை/நிகர்மெய் நிகழ்வாக ஒரு இலக்கியக் கூட்டம். இதனை முன்னெடுத்திருப்பது “வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” எனும் இணையக் குழுமம். எழுத்தாளர் இரா.முருகனின் சிறுகதைகள் குறித்து நான் உரையாற்ற இருக்கிறேன். முழுவிவரங்கள் விரைவில் வாழ்தல் இனிது… Read More »இரா.முருகனின் சிறுகதைகள்