மூன்று கவிதைகள் ஆத்மார்த்தி 1 வாங்கும் பொழுதில் ஒரே நிறத்தில் இருந்தது நாள்பட மெல்ல நிறம் வெளுத்துத் தொட்டிக் குழாமில் தனித்துத் தெரிகிற அந்த மீனுக்குச் சூட்டி ஆறேழுமுறை அழைத்தும் விட்டேன் யார்க்கும் சொல்லாத உன் பெயரை 2 நெடு நேரமாய்க்… Read More »
கவிதை
27 காதல் கவிதைகள்
இவை புதிய தலைமுறை இதழில் வெளியானவை. இதை வாசித்துக் காதலில் ஆழ்ந்து இன்புறுங்கள். காதலின் துன்பமே இவ்வுலகின் ஆகச்சிறந்த இன்பம். இசையும் காதலும் நிஜமற்ற பொய்கள். வாழ்க காதல். வாழ்தல் இனிது 1 ஒரு காதல் கடிதத்தை எப்படித் தொடங்குவது என்பது… Read More »27 காதல் கவிதைகள்
சாலச்சுகம் 19
அன்பை அளவிடுதல் என்னிடமிருப்பது தாங்க முடியாத பேரன்பு. எப்படியானதென்றால் “விற்கப் பண்டங்களைச் சுமந்துகொண்டு வீதிவழியே வருபவள் வெயில் பொழிவின் நடுவே கிடைக்கும் சின்னஞ்சிறு நிழலடியில் தலைச்சுமையை இறக்கித் தரையில் கிடத்தி விட்டுச் சற்றே கண்ணயர முனைகிறாள். நொடிப்பொழுதில் அரிதினும் அரியவொன்றைக் களவுகொடுக்கிறாற்… Read More »சாலச்சுகம் 19
டச்-வுட் 2
ஸ்வர்ணக்குவியலைப் பெற்றுக் கொண்டு வெல்லமிட்ட அவலைப் பரிசளித்தவனின் காதுகள் இன்று நீ உபசரிக்கவிருக்கும் திரவத்துக்கு ஈடாய் என்னால் என்ன தரமுடியும் நண்பா என் காதிரண்டும் உன் காலடி அடிமைகள். சொல்ல முயற்சித்து முழுமையாகாமற் போகவிருக்கும் உந்தன் கதைச்சோகம் முழுமையையும் கேட்டுத் திளைக்கட்டும்… Read More »டச்-வுட் 2
டச் வுட் – 1
என் வாழ்வின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். எப்படியாவது உன்னைக் கண்டுபிடித்தே ஆவது. அதன் பின், வேறேதும் நோக்கமில்லை. கண்டுபிடித்த உன் முன் அந்தக் கணத்தின் என்னை நிறுத்தி வைப்பதோடு அந்த நோக்கம் நிறைந்துவிடும். எதிர்பாராமையோ அச்சமோ கொண்டபடி அந்தத் தோன்றலை… Read More »டச் வுட் – 1
ஹம்மிங்
எப்போதும் எதையும் பாடியிராதவள் யாரும் சமீபத்திலில்லை என்பதான சூழல்வேகத்தில் அந்தப் பாடலின் இடைவரியொன்றைத் தன்னையறியாது பாடுகிறாள் அந்தவரி அடுத்த கணமே ஒரேயொரு ஒருவரிப்பாடலாக அனிச்சைகளின் பேரேட்டில் தன்னையெழுதிக் கொள்கிறது. இனிமேல் அந்தப் பாடல் என்னைக் கடக்கையிலெல்லாமும் அந்தவொரு வரி இவள் குரலில்… Read More »ஹம்மிங்
19 தனியளின் சம்பாஷணை
சமீபத்துப் ப்ரியக்காரி 19 தனியளின் சம்பாஷணை 1 “இன்றைக்கும் நிலவு வரும்” என்கிற எண்ணத்தில் தொடங்குகிறது உறங்காமையின் இதிகாசம். 2 நிலா பார்த்தல் என்பது அடிமையைப் பழக்குவதற்கான உத்தம உபாயங்களிலொன்று. 3 எப்படி உறங்குவது என ஒரு கண் வெடிக்கையில் ஏன்… Read More »19 தனியளின் சம்பாஷணை
20 வான்பாதி
20 வான்பாதி சிறுபிள்ளை மணிக்கட்டு வலிக்க வலிக்க ஏற்றிக் கொண்டிருக்கையில் சட்டென்று நூலறுபடுகிற பாதிவான் பட்டம் போலொரு பெரிய விக்கல் அதற்கு நடுவே வெறித்த கண்களோடு உயிரைவிடுகிற நாள்பட்ட பிறழ்சாட்சியக் காரன் வெளிப்படுத்தச் சித்தங்கொண்ட முதலாவது உண்மைபோலவே எனக்குள்ளே புதைந்தழியட்டும் எனதன்பு… Read More »20 வான்பாதி
19.கவிதை என்பது என்ன
கவிதை என்பது என்ன திக்கித்து இருப்பதா மௌனித்திருப்பதா இடத்திலிருந்து எழுவதும் நகர்வதுமா (மழை வருகிறாற் போலிருக்கிறதல்லவா என்றபடியே கடந்து சென்றவனின் முதுகையே வெறித்தேன்) மழை வருதலா முதுகை வெறித்தலா (ஏன் நேத்து வரேன்னு சொல்லிட்டு வர்லை என்று செல்லம் கடிந்து நெஞ்சில்… Read More »19.கவிதை என்பது என்ன
18 சுமாராகப் பாடுகிறவள்
சமீபத்துப்ரியக்காரி 18 சுமாராகப் பாடுகிறவள் “சுமாராகப் பாடினேனா? என்றாள், பாடி முடித்து விட்டு. மெல்லப் புன்னகைத்தேன். ஒரு பாடலைப் பாடி முடித்த பிறகு அடுத்த சொல்லைப் பேசுவதென்பது மிகவும் கவனத்திற்குரியதாகிறது. அப்படியான சொற்களின் எடை ஒரு பாடலுக்கு நிகராய் இருந்து விடுபவை.… Read More »18 சுமாராகப் பாடுகிறவள்