கவிதை

10 நனவிலி

சமீபத்துப்ரியக்காரி 10 நனவிலி தனிமையென்றவொன்று எப்படியிருக்குமென்று ருசித்துப் பார்க்கமட்டுமேனும் ஒரேயொரு கணம் அதனொரு துளி அதன் துளியினொரு துகள் அந்தத் துகளினொரு அணுவளவேனும் என்னுள்ளிலிருந்து வெளியேறிப் போய்வாயேன் என்று இறைஞ்சியிறைஞ்சிக் கேட்டனன். “அப்படியே” எனச்சொல்லிச் சென்றவள் திரும்பி வருமட்டிலும் தன்னகத்தின் வாயிலில்… Read More »10 நனவிலி

9 தானற்ற வேறொருவள்

சமீபத்துப்ரியக்காரி 9 தானற்ற வேறொருவள் வேறு வேறு மாந்தர்க்கு          வெவ்வேறு முத்தங்கள்    உண்டெனக் கருதுவதாயின்            ஒற்றைத் தருணமும்   எனக்கு வேண்டாம்        … Read More »9 தானற்ற வேறொருவள்

8 ஒன்றேயொன்று

சமீபத்துப்ரியக்காரி 8 ஒன்றேயொன்று உன் கண்களில் சதா கனன்றுகொண்டிருக்கிற காலகால ஒளியை மட்டுப்படுத்திய பின் தொடங்கும் முடிவற்ற இருளின் பூர்ணாகதம் நான்

7 பொன்-பொழுது-தோன்றல்

7 பொன்-பொழுது-தோன்றல்      சமீபத்துப்ரியக்காரி ஒரு மைதுனத்தின் பாதியில் நீ வந்து சேர்கின்ற அனிச்சையென்பது இவ்வாறானது. கவனிக்க மறந்த கொதி பொங்கி எரிதலை அணைத்து வைக்கிற பாலினொரு வெண்கோடு மெல்லக் கரைதாண்டிக் கூடத்திற்கு வந்து சேர்கையில் கூடவே அழைத்து வரும்… Read More »7 பொன்-பொழுது-தோன்றல்

6 பழைய

சமீபத்துப் ப்ரியக்காரி 6 பழைய அன்பே உன்னால்   உன்னை வெளிப் படுத்த முடியாத போது நானிந்தப்ரபஞ்சத்தை இரண்டாகக் கிழித்தெறிவேன். அதன் பின் எல்லாமும் இரண்டாய் மாறும். நீ யாருடைய கண்களுக்குத் தென்பட விரும்பவில்லையோ அவர்கள் ஒரு உலகத்தில் தள்ளப்படுவார்கள். அதன் பெயர்… Read More »6 பழைய

சுமாராதல்

சுமாராதல் என் குழந்தைகளுக்கு தனித்த திறமைகளேதும் இருக்கவில்லை. பாடவாசிப்பைத் தாமதமாகவே மனனம் செய்கிறார்கள் தகவல்பிழைகளோடு பேசுகின்றனர் சுத்தமும் ஒழுங்கும் பலமுறை சொல்லிக் கொடுத்தபின்பும் குறைவைப்பவர்கள் மேலும் சப்தமாகச் சிரித்துக் கொண்டும்,அழுதுகொண்டும் பல வேலைகளுக்குக் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று வருபவர்கள். கூட்டங்களிலிருந்து வரிசையாய்… Read More »சுமாராதல்

சாலச்சுகம் 20

சாலச்சுகம் 20 காணாமச்சம் திடீரென்று ஒரு மச்சத்தைக் காணவில்லை. நேற்று இரவு உறங்கும் போதும் அந்த மச்சம் என்னோடு தான் இருந்திருக்கிறது என்று நம்ப விரும்புகிறேன். உண்மையில் எப்போது அதனைக் கடைசியாக கவனித்தேன் என்று தெரியவில்லை.. இந்த தொலைதல் மிகவும் அந்தரங்கமாகத்… Read More »சாலச்சுகம் 20

5 ந்யூமரிக்

சமீபத்துப்ரியக்காரி 5 ந்யூமரிக் “என்னிடம் பேசேன். உன்னைப் பற்றிச்சொல்லேன். ஏதாவது கேளேன். சின்னச்சின்ன மௌனங்களை மட்டுமாவது பெயர்ப்பதற்கு அர்த்தமற்ற உரையாடல் உதவட்டுமே.. என்னை வம்புக்கிழேன். என்னிடம் குறும்பாய்ப் பேசேன். என் சந்தேகத்தை துவக்கேன். வேறு யார் பற்றியேனும் பொய்யாய் புகழ்ந்து எதையாவது… Read More »5 ந்யூமரிக்

4 சொல்லாச்சொல்

  சமீபத்துப்ரியக்காரி 4 சொல்லாச்சொல் ஏழு கடல் ஏழு மலை இன்னும் பிற எல்லாமும் தாண்டி வந்து நீ துயிலெழக் காத்திருக்கும் ஓர் நாளில் கனவின் பிடியில் சற்றுக் கூடுதலாய்ச் சஞ்சரித்து விட்டுத் தாமதமாய் எழுந்துகொள்கிறாய். “எப்போது வந்தாய்   ஏன்… Read More »4 சொல்லாச்சொல்

சாலச்சுகம் 19

அனர்த்தங்களாய்ப் பெருகும் ஆயிரமாயிரம் வாழ்வுகளின் இருள் நடுவே அகல்-சிறு-தெறல் போலவொரு ஒளி நீ சுடரடி நிழல் போன்றதென் னன்பு சாலச்சுகம்