Skip to content

poem

“SORRY என்றொரு குறுஞ்செய்தி”

1. அந்த ஊரைச் சேர்ந்த யாராவது எங்களூருக்கு வந்ததுண்டா எனக் கேட்கையில் எல்லாம் ம் என்ற ஒற்றெழுத்து ஒருபதில் மாத்திரமே சொல்வது வழக்கம். உறங்கவும் விடாத விழிக்கவும் ஏலாத தீராக்கடன் நினைவின் மனப்பாழ் போலச் சொல்லியிராத ஒரு கதை 2. பிறழ்… Read More »“SORRY என்றொரு குறுஞ்செய்தி”

    சதுரங்கநாய் _________________ பேச்சுவாக்கில் “சதுரங்கநாய்” என்றேன். “அதென்னது?” முகம் சுளிக்கிறீர்கள். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் சதுரங்கப் பலகையைச் சுற்றிச் சுற்றி யாராவது தன்னையும் அந்தக் கட்டங்களினூடே அனுமதிக்க மாட்டார்களா?வென காலங்காலமாய் வந்து வந்து அல்லாடுகிற ஆட்டமறியா நாய்ஜென்மத்தை நீங்கள்… Read More »

சுமாராதல்

சுமாராதல் என் குழந்தைகளுக்கு தனித்த திறமைகளேதும் இருக்கவில்லை. பாடவாசிப்பைத் தாமதமாகவே மனனம் செய்கிறார்கள் தகவல்பிழைகளோடு பேசுகின்றனர் சுத்தமும் ஒழுங்கும் பலமுறை சொல்லிக் கொடுத்தபின்பும் குறைவைப்பவர்கள் மேலும் சப்தமாகச் சிரித்துக் கொண்டும்,அழுதுகொண்டும் பல வேலைகளுக்குக் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று வருபவர்கள். கூட்டங்களிலிருந்து வரிசையாய்… Read More »சுமாராதல்

சாலச்சுகம் 20

சாலச்சுகம் 20 காணாமச்சம் திடீரென்று ஒரு மச்சத்தைக் காணவில்லை. நேற்று இரவு உறங்கும் போதும் அந்த மச்சம் என்னோடு தான் இருந்திருக்கிறது என்று நம்ப விரும்புகிறேன். உண்மையில் எப்போது அதனைக் கடைசியாக கவனித்தேன் என்று தெரியவில்லை.. இந்த தொலைதல் மிகவும் அந்தரங்கமாகத்… Read More »சாலச்சுகம் 20

5 ந்யூமரிக்

சமீபத்துப்ரியக்காரி 5 ந்யூமரிக் “என்னிடம் பேசேன். உன்னைப் பற்றிச்சொல்லேன். ஏதாவது கேளேன். சின்னச்சின்ன மௌனங்களை மட்டுமாவது பெயர்ப்பதற்கு அர்த்தமற்ற உரையாடல் உதவட்டுமே.. என்னை வம்புக்கிழேன். என்னிடம் குறும்பாய்ப் பேசேன். என் சந்தேகத்தை துவக்கேன். வேறு யார் பற்றியேனும் பொய்யாய் புகழ்ந்து எதையாவது… Read More »5 ந்யூமரிக்

4 சொல்லாச்சொல்

  சமீபத்துப்ரியக்காரி 4 சொல்லாச்சொல் ஏழு கடல் ஏழு மலை இன்னும் பிற எல்லாமும் தாண்டி வந்து நீ துயிலெழக் காத்திருக்கும் ஓர் நாளில் கனவின் பிடியில் சற்றுக் கூடுதலாய்ச் சஞ்சரித்து விட்டுத் தாமதமாய் எழுந்துகொள்கிறாய். “எப்போது வந்தாய்   ஏன்… Read More »4 சொல்லாச்சொல்

சாலச்சுகம் 19

அனர்த்தங்களாய்ப் பெருகும் ஆயிரமாயிரம் வாழ்வுகளின் இருள் நடுவே அகல்-சிறு-தெறல் போலவொரு ஒளி நீ சுடரடி நிழல் போன்றதென் னன்பு சாலச்சுகம்