தெ வி ட் டா த தெ ள்
எனக்கு
வேண்டியதெல்லாம்
தலைமறைவுக்கென
யாருமறியாத ஓரிடம்
மனித நுழைதல்
நடைபெற்றிராத
ஆழ்வனம்
ஆங்கோர் கனமரம்
கிளைகளூடாக ஓர் குடில்
உள்ளொரு படுக்கை
அதில்
முடங்குகையில் மேலே
போர்த்தவொரு கம்பளி
போலவொரு மனசு
சாலச்சுகம்